கமலை விளாசும் “நமது எம்.ஜி.ஆர்.”!

மிழக அரசில் அனைத்து மட்டங்களிலும் ஊழல் நிலவுகிறது என்று நடிகர் கமல்ஹாசன் விமர்சிக்க..  பதிலுக்கு அவரை கடுமையாக  விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக அமைச்சர்கள்.

இந்த நிலையில் ஆளும் அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆர். இதழில், “உலக்கை நாயகனா? உலகம் சுற்றும் வாலிபனா?”   என்ற தலைப்பில் சித்திரகுப்தன் என்பவர் எழுதிய கவிதை வெளியாகி இருக்கிறது.

ஏற்கெனவே கடந்த பிப்ரவரி மாதம், “சகலகலா சண்டாளனே” என்ற பெயரில் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்து கவிதை எழுதியிருந்தார் சித்திரகுப்தன் என்பது குறிப்பிடத்தக்கது.

சரி..  இன்றைய கவிதையை படியுங்கள்..