சென்னை,

த்திய பா.ஜ.க. அரசுடன் தமிழக அரசு இணக்கமான போக்கை க‌டைபிடிப்பதாக கூறப்படும் நிலையில், அதி‌முகவின் அதிகாரபூர்வ‌ நாளிதழான‌‌ டாக்டர்‌ நமது எம்.ஜி.ஆரில், மத்திய அரசை‌யும், பாஜகவையும் கடுமையாக விமர்சித்து கவிதை வெளியாகி உள்ளது.

உதய் திட்டத்திற்கு ஒத்துழைப்பு, சரக்கு மற்றும் சேவை வரிக்கு ஆதரவு, நீட் தேர்வு என மத்திய அரசின் திட்டங்களையெல்லாம் ஏற்றுக்கொண்டு நெருக்கடியில் நெளியவேண்டிய நிலையில் மாநில அதிமுக அரசு இருப்பதாக அக் கவிதையில் கூறப்பட்டுள்ளது.

அதோடு, “ மத்திய அரசிடம் கேட்டது எதுவும் கிடைக்கவில்லை:  கெட்டது எதுவும் விலகவில்லை” என்று நயமான வரிகளில் கனமாக இடித்துரைக்கிறது கவிதை.

தவிர, “மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது:  வெங்கய்ய நாயுடு விடுகதை சொல்கிறார்: , மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் புதுக்கதை சொல்கிறார்.

கழகங்களில்லா தமிழகம் எனக் கூறி கலர் கலரான கனவுகளில் காவிகள் துள்ளுகிறார்கள்” என்றும் கவிதை சாடுகிறது.

பிரதமர் மோடியை நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியுள்ள நிலையில் இன்று வெளியாகியுள்ள இந்த விமர்சனக் கவிதை வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.