பூங்காவிலும் தொழுகை நடத்த தடை: உ.பி. முதல்வர் யோகி அறிவிப்பு

லக்னோ:

உ.பி. மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பொதுஇடத்தில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது பூங்காக்களிலும் தொழுகை நடத்த அனுமதி கிடையாது என்று மாநில பாஜக அரசு அறிவித்து உள்ளது. இது நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் வாழ்ந்து வரும் சிறுபான்மையின மக்களான இஸ்லாமியர்கள், விசேஷ தினங்களில் மைதானங்கள், கடற்கரை, பூங்காக்கள்  போன்ற பொது இடங்களில் அனைவரும் கூடி தொழுகை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மையினர்களுக்கு எதிரான நடவடிகைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. உ.பி. மாநிலத்தில்  பொது இடங்களில் தொழுகை நடத்த மாநில அரசு தடைவிதித்து உள்ளது.

முதல்கட்டமாக  நொய்டாவில் பொது இடங்களில் தொழுகை நடத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. நொய்டா செக்டார் 58 பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்கள், தங்கள் ஊழியர்கள் பொது இடங்களில் தொழுகை நடத்த அனுமதி வழங்கக் கூடாது என காவல் துறையினருக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதன் அறிக்கையில், மசூதி, தர்ஹாக்கள் தவிர பொது இடங்களில் தடையை மீறி தொழுகை நடத்தினால் அதற்கு அந்தந்த  நிறுவனங்களே பொறுப்பு. தொழுகை மட்டுமின்றி வேறு எந்த மத நடவடிக்கைகளை பொது இடங்களில் நடத்த அனுமதி கிடையாது. அதனால் அப்பகுதி நிறுவனங்களில் வேலை செய்யும் இஸ்லாமியர்கள், அங்கு தொழுகை நடத்த அனுமதி கேட்டால் வழங்கக் கூடாது. அது சட்டப்படி குற்றமாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பூங்காவிலும் தொழுகை மற்றும் மத நடவடிக்கைகளை மேற்க்கோள போலீஸ் தடை விதித்துள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை என்பதால் உ.பி. மாநிலத்தில் பூங்காவில் தொழுகைகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் நேற்று அதிரடியாக இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து  பூங்காக்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது

கார்ட்டூன் கேலரி