மாஸ்டர்’’ படத்தின் இந்திப்பெயர் என்ன தெரியுமா?

மாஸ்டர்’’ படத்தின் இந்திப்பெயர் என்ன தெரியுமா?

விஜய் நடிக்கும் ‘ மாஸ்டர்’ படத்துக்கு  ‘

‘U / A ‘’ சான்றிதழ் அளிக்கப்பட்டிருப்பது தெரிந்த விஷயம்.

இந்தப்படம் பொங்கல் பண்டிகை அன்று தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

 தமிழகத்தில் மட்டும் ஆயிரம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

கேரளாவில் இந்தப்படம் , நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

 திருவாங்கூர் ஏரியாவில் ’’மாஸ்டர்’ படத்தை வெளியிடும் உரிமையை தயாரிப்பாளர் லிஸ்டின் ஸ்டீபனின் ‘மேஜிக் பிரேம்ஸ்’’ நிறுவனமும், கொச்சி– மலபார் ஏரியாவில் வெளியிடும் உரிமையை பார்ச்சூன்ஸ் சினிமாஸ் நிறுவனமும் பெற்றுள்ளன.

இந்தியில் மாஸ்டர் படத்தை ‘டப்’ செய்து வெளியிடும் உரிமையை,  ‘’ B 4 V MOTION ‘  பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளது.

இந்தியா முழுவதும் இந்தியில் மாஸ்டர் படத்தை வெளியிடும் இந்த நிறுவனம் படத்துக்கு ‘’  VIJAY THE MASTER’’ என்று பெயர் சூட்டி  ‘’ CLASH BEGINS SOON’ என்ற வாசகத்துடன்’ விளம்பரம் வெளியிட்டுள்ளது.

ரிலீசுக்கு பிறகு ஓ.டி.டி. தளத்தில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடும் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் ’ பெற்றுள்ளது.

-பா.பாரதி.