அடுத்த ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர் என்ன தெரியுமா?

நியூயார்க்

டுத்து வெளிவர உள்ள ஜேம்ஸ்பாண்ட் படத்தின் பெயர் நோ டைம் டு டை (NO TIME TO DIE) என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1953 ஆம் வருடம் பிரபல நாவலாசிரியரான இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய துப்பறியும் நிபுணர் ஜேம்ஸ்பாண்ட் உலகம் முழுவதும் புகழ் பெற்றது. கடந்த 1962 முதல் அந்த கதாபாத்ஹ்டிரத்தை கதாநாயகனாகக் கொண்டு 24 திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அனைத்தும் ஆக்‌ஷன் டைப்பில் அமைந்த வெற்றிப் படங்களாகும்.  விறுவிறுப்பான இந்த படங்களுக்கு உலகெங்கும் ரசிகர்கள் உள்ளனர்.

 

இதுவரை வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் படத்தில் பல நடிகர்கள் அந்த  வேடத்தில் நடித்துள்ளனர். கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படங்கள் வரை நான்கு படங்களில் டேனியல் கிரெய்க் நடித்துள்ளார். ஐந்து வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அவர் ஜேம்ஸ்பாண்டாக நடிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

 

ஜேம்ஸ்பாண்டின் அதிகாரபூர்வ டிவிட்டர் பக்கத்தில் நேற்று வெளியான பதிவில் “வரும் 2020ஆண்டு ஏப்ரல் 3 ஆம் தேதி லண்டனிலும் அதே மாதம் 8 ஆம் தேதி அன்று  அமெரிக்காவிலும் வெளியாக உள்ள “நோ டைம் டு டை” (NO TIME TO DIE) என்னும் படத்தில் ஜேம்ஸ்பாண்ட் பாத்திரத்தில் டேனியல் கிரெய்க் நடிக்கிறார்” என அறிவிக்கப்பட்டுள்ளது.