நாசா:

செவ்வாய் கிரகத்திற்கு பெயர் பதிவு செய்தவர்கள் பட்டியலில் இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளது என்று நாசா தெரிவித்துள்ளது.

செவ்வாய் கிரகத்தின் மேல் பகுதியை ஆராய்ச்சி மேற்கொள்ள அமெரிக்கா ஒரு வாகனத்தை ராக்கெட் மூலம் அனுப்புகிறது. ‘இன்சைட்’ என்ற பெயர் கொண்ட இந்த ராக்கெட் 2018-ம் ஆண்டு மே 5ம் தேதி கலிபோர்னியாவின் வாண்டன்பெர்க் விமானப்படை தளத்தில் இருந்து இந்த ராக்கெட் அனுப்பப்படுகிறது.

விண்வெளி ஆய்வில் ஆர்வம் உள்ளவர்கள் தங்களது பெயரை இதில் சேர்த்துக் கொள்ளலாம் என்றும், அதற்காக ஆராய்ச்சி ராக்கெட்டில் வைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர் ‘சிப்’ல் பெயரை பதிவிடலாம் என்றும் நாசா அறிவித்தது.

இது குறித்து நாசா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘‘இந்த பெயர் பதிவு திட்டத்தில் உலக அளவில் மொத்தம் 24 லட்சத்து 29 ஆயிரத்து 807 பேர் பதிவு செய்துள்ளனர்.

இதில் 6 லட்சத்து 76 ஆயிரத்து 773 பேர் அமெரிக்கர்கள், 2 லட்சத்து 62 ஆயிரத்து 752 பேர் சீனர்கள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 899 பேர் இந்தியர்கள்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியர்கள் 3வது இடத்தில் உள்ளனர்.