எக்மோர், பூந்தமல்லி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 1018 இடங்களின் பெயர்கள் மாற்றம்

சென்னை :

மிழ்நாட்டிலுள்ள ஊர்களின் பெயர்கள் தமிழ் உச்சரிப்பைப் போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்தப்படும் என்று தமிழ் வளர்ச்சி துறை சார்பாக 2018-19ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டது.

 

இதனை தொடர்ந்து, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு அமைக்கப்பட்டு அந்த மாவட்டத்தில் உள்ள ஊர்களின் தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ற ஆங்கில சொற்களை பரிந்துரை செய்து அனுப்பினர்.

இந்த குழு அனுப்பிய பரிந்துரையை, தமிழ் வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்ட ஆலோசனைக்குழு ஆராய்ந்து தேவையான திருத்தங்களை செய்து அதனை அரசு ஏற்றுக்கொண்டு, அரசாணையாக வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள 1018 இடங்களின் ஆங்கில எழுத்துக்கள் தமிழ் உச்சரிப்பை போன்று மாற்ற பட்டிருக்கிறது, இனி ஆங்கிலத்தில் எக்மோர் (Egmore) என்று எழுதிவந்த எழும்பூர் இனி ஆங்கிலத்திலும் எழும்பூர் (Ezhumboor) என்றே எழுதப்படும்.

முக்கிய சில ஊர்களின் திருத்தங்கள் :

ஊர் பெயர் தற்போதுள்ள ஆங்கில எழுத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆங்கில எழுத்து
எழும்பூர் Egmore Ezhumboor
திருவல்லிக்கேணி Triplicane Thiruvallikkeni
பூவிருந்தவல்லி Poonamallee Poovirunthavalli
தூத்துக்குடி Tuticorin Thooththukkudi
திருவில்லிபுத்தூர் Srivilliputtur Thiruvillipuththur
வத்திராயிருப்பு Watrap Vaththiraayiruppu
கோயம்புத்தூர் Coimbatore Koyampuththoor
நாவலூர் Navalur Naavaloor
விழுப்புரம் Villupuram Vizhupuram
செஞ்சி Gingee Senji
குளச்சல் Colachel Kulachchal
ஆற்காடு Arcot Aarkadu
மதுரை Madurai Mathurai