திருப்பதியில் நடிகை நமிதா நடிகர் வீரேந்திர திருமணம் நடைபெற்றது

--


‪நடிகை நமீதா – வீரேந்திர சவுத்திரி திருமணம் திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரே கிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்றது.

தனது நீண்டகால நண்பர் வீரேந்திராவை  நடிகை நமிதா திருப்பதியில் உள்ள இஸ்கான் கிருஷ்ணன் கோவிலில் இன்று திருமணம் செய்து கொண்டார்.

நமிதாவுக்கு நெருங்கிய நடிகர், நடிகைகள் மற்றும் அவரது நண்பர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த நடிகை  நமிதா கடந்த  2002ம் ஆண்டு வெளியான ‘சொந்தம்’ தெலுங்குப் படத்தின் மூலம் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து  விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். நான்கு தென்னிந்திய மொழிகளிலும் நடித்துள்ள நமிதா, இந்திப் படத்திலும் நடித்துள்ளார்.

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடிகை நமிதா நடுவராகக் கலந்துகொண்டு  கலக்கினார்.

சமீபத்தில் விஜய்டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்.