முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைத்த நமீதா, காயத்ரி!  பிக்பாஸ் அலப்பறை

நெட்டிசன்:

ஜெயச்சந்திர ஹஷ்மி (Jeyachandra Hashmi) அவர்களின் முகநூல் பதிவு

நடந்த குழப்பத்துல இந்த காயத்ரி, நமீதாலாம் முழு பூசணிக்காய சோத்துல போட்டு மறச்சுருக்குங்க. நாமளும் மிஸ் பண்ணிட்டோம்.

இந்த ஜுலி ஓவியா மேட்டர்ல மெயின் சீனே என்னது ? டைனிங் டேபிள்ல நமீதா ‘ட்ராமா, ஆக்டிங், 3 மாசம் எப்படி இருக்கனு பாத்துடறேன்’ னு ஓவியாவ பாத்து சொன்னத, ஜூலி தன்னை சொன்னதா நெனச்சுகிட்டு அழுததாவும், ஓவியா ‘அது என்னை சொன்னது’ சொல்லாம ஜுலிய சொன்ன மாதிரியே சமாதானப்படுத்தி ‘ட்ரிகர்’ பண்ணதாவும் அதனாலதான் எல்லா பிரச்சினையும் வந்ததுன்றதும் தான ?

இப்ப மறைக்கப்பட்ட பூசணிக்காய் என்ன தெரியுமா ? டைனிங் டேபிள்ல நமீதா கழுவி ஊத்துனது ஓவியாவ இல்ல. ஜுலிய தான்.

டவுட்னா தமிழ் தலைவாஸ் வந்த எபிசோட ஹாட்ஸ்டார்ல போட்டுப் பாருங்க. இப்பதான் பாத்தேன்.

கபடி டீம் முன்னாடி ஜூலிய லெட்டர படிக்க வேணாம்னு நமீதா சொன்னாங்க. அதுக்கு கோச்சுட்டுதான் ஜூலி வெளிய உக்காந்துருக்கானு நெனச்சுட்டு ஜூலியதான் ட்ராமா பண்றான்னு திட்டிட்டு இருந்தாங்க.

இது அந்த டேபிள்ல இருந்த காயத்ரிக்கும் ஓவியாக்கும் கண்டிப்பா தெரியும்.

ஆனா காயத்ரி அப்படியே ப்ளேட்ட திருப்பிப் போட்டு இப்ப வரைக்கும் அத வச்சுதான் எடிட்டிங்ல பிரச்சினை, கேமிரால பிரச்சினைனு ப்ளே பண்ணிட்டு இருக்கு. அது காயு பிஹேவியர். ஆனா ஓவியா இப்பவரைக்கும் அத வெளிய சொல்லல. அதான் சேரி பிஹேவியர் !!

விழுற ஒவ்வொரு ஒட்டும் சும்மா இல்ல