நடிகை நமீதா திருமணம் : பிக் பாஸ் ரைஸா டிவிட்டரில் அறிவிப்பு

குஜராத்தை சேர்ந்த நடிகை நமீதா   இவர் எங்கள் அண்ணா என்னும் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.  பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.   பல படங்களில் கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார்.   இளமை ஊஞ்சல் என்னும் படம் கடந்த 2016ஆம் வருடம் வெளியானது.  இவர் நடிக்கும் பொட்டு என்னும் தமிழ்ப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியில் இருந்து இடையில் வெளியேறினார்.  அதற்குப் பின் ஓய்வில் இருக்கிறார்.  இவருடன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ரைஸா டிவிட்டரில் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் நமீதா மற்றும் வீர் திருமணம் செய்துக் கொள்ளப் போவதை மகிழ்வுடன் அறிவிப்பதாக தெரிவித்துள்ளார்.  அதே வீடியோவில் நமீதாவும் தோன்றி, “நான் வீர் என்பவரை நவம்பர் 24ஆம் தேதி திருமணம் செய்துக் கொள்ள இருக்கிறேன்.  உங்கள் அன்பும் ஆசிகளும் வேண்டும்.  நன்றி மச்சான்ஸ்” எனக் கூறி உள்ளார்.

இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.   வீர் என்பவரின் முழுப்பெயர் வீரேந்திர சவுத்ரி ஆகும்.