https://www.instagram.com/p/B90hrWJA7kq/

எங்கள் அண்ணா படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நமீதா. அதன் பிறகு அதிகம் கவர்ச்சி காட்டி பல படங்களில் நடித்தார்.

அதன்பின் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஒரு நபர் தனக்கு தரக்குறைவாக மெசேஜ் அனுப்பி வருவதாக நமிதா அந்த நபரின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

“இந்த நபர் என்னை தவறான வார்த்தைகளில் அழைக்கிறார். ‘Hi Item’ என அவன் எனக்கு மெசேஜ் அனுப்பியதற்கு நான் கோபமாக பதிலடி கொடுத்தேன். அதற்கு அவன் தன் இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டது என கூறி சமாளித்தான். அதன் பின் என்னுடைய ஆபாச வீடியோ ஒன்றை பார்த்ததாகவும் அதை ஆன்லைனில் வெளியிடப்போவதாகவும் மிரட்டினான். என பதிவிட்டுள்ளார் .