என்மீது பாலியல் புகார் கூற தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார்: ‘காலா வில்லன்’ நானே படேகர்

மும்பை:

ன்மீது பாலியல் புகார் கூற தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார் என  ‘காலா வில்லன்’ நானே படேகர் நடிகை தனுஸ்ரீதத்தாவுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். எனது மகள் வயது உடையவர் தனுஸ்ரீதத்தா என்றும் தெரிவித்து உள்ளார்.

பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நடிகரான நானா படேகர் உடன் நடிகைகள் நடிக்கக்கூடாது என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா சமீபத்தில் கூறியிருந்தார். கடந்த  2008 ஆம் ஆண்டு ஹார்ன் ஓகே ப்ளீஸ்  என்ற படத்தின் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டபோது,  தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக நானா படேகர் மீது  குற்றச்சாட்டு கூறியிருந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகரான நானே படேகர் தனுஸ்ரீதத்தாவின் புகாருக்கு பதில் கூறி உள்ளார். நான் 2008 ம் அண்டே இந்த சர்ச்சைக்கு பதிலளித்து விட்டேன் என்று கூறினார். மேலும்,  என் மகள் வயதுடையவர் தனுஸ்ரீ தத்தா என்றவர், தனது 35 ஆண்டுகால திரைப்பயணத்தில் என்னை யாரும்  குற்றம் சாட்டியதில்லை என்றும்,  என் மீது குற்றம் சாட்ட தனுஸ்ரீ தத்தாவை தூண்டியது யார் என்பதும் எனக்கு தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

பிரபல நடிகரான நானே படேகர் தமிழில் பொம்மலாட்டம், காலா போன்ற படங்களில் நடித்துள்ளார். மூத்த நடிகரான நானா பாலிவுட்டில் பிரபலமானவர். ரஜினியின் காலா படத்தில் வில்லனாக நடித்து தமிழ் ரசிகர்களிடமும் அப்ளாஸ் வாங்கியவர்.. மூன்று முறை தேசிய விருதும், ஃப்லிம்பேர் விரும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி