பெண்களிடம் மோசமாக நடந்துகொள்பவர் நானா படேகர்: பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா தகவல்

மும்பை:

பெண்களிடம் மோசமாக நடந்துகொள்ளும் நடிகரான நானா படேகர் உடன் நடிகைகள் நடிக்கக்கூடாது என்று பிரபல நடிகை தனுஸ்ரீ தத்தா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நானா படேகருடன் இணைந்து நடிப்பதை பிரபல நடிகர்கள், நடிகைகள்  தவிர்க்க வேண்டும் என்றும் என்று நடிகை தனுஸ்ரீதத்தா கூறி உள்ளார். இவரும் கவர்ச்சி காட்டி நடிப்பதில் கைதேர்ந்தவர்தான்.

ஜார்க்கண்டைச் சேர்ந்த தனுஸ்ரீ தத்தா கடந்த  2005ம் ஆண்டு  முதல் பாலிவுட்டில் நடித்து வருகிறார். தொடக்க்ததில் கவர்ச்சி காட்டி நடித்து வந்த அவர், கடந்த 2010ம் ஆண்டு விஷாலுடன் இணைந்து தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற தமிழ் படத்தில் நடித்திதார்.

இதற்கிடையில், கடந்த  2009ம் ஆண்டு  வெளியான ‘ஹார்ன் ஓகே ப்ளீஸ்’ படப்பிடிப்பில் தன்னிடம் ஒரு பிரபல நடிகர் மோசமாக நடந்துகொண்டதாக கூறி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். தற்போது அந்த நடிகர் யார் என்பதை ஊடகங்களுக்கு தெரிவித்து உள்ளார்.

தனியார் டிவி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள தத்தா, தன்னிடம் மோசமாக நடந்துகொண்ட அந்த பிரபல நடிகர் நானே படேகர் என்றும், அவர்  பெண்களிடமும், உடன் நடிக்கும் நடிகைகளிடமும் மோசமாக நடந்துகொள்வது பற்றி பாலிவுட்டில் அனைவருக்கும் தெரியும். ஆனால், யாரும் அதுகுறித்து பேசுவது இல்லை என்று கூறினார்.

அவருக்கு இணங்காத பல  நடிகைகளை அவர் அடித்துள்ளதாகவும், பாலியல் துன்புறுத்தல்  செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டிய தத்து, அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பியதும் இல்லை.. யாரும் எழுதியதும் இல்லை என்று கூறினார்.

கடந்த எட்டு வருடங்களில் நானா படேகருடன் இணைந்து அக்ஷய் குமார் சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் ரஜினி கூட அவருடன் நடித்துள்ளார். பெரிய நடிகர்கள், நடிகைகள் அவரைப் போன்ற குற்றவாளி யுடன் இணைந்து நடிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு தனுஸ்ரீ தத்தா கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி