கன்னடத்தில் “எனக்கு இந்தி வரலை போங்கப்பா” தொடங்கி வைத்த பிரகாஷ் ராஜ்…..!

இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி ஷர்ட்கள் பிரபலமான நிலையில் இப்போது அது கன்னடத்திலும் பரவத் தொடங்கியுள்ளது.

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா உள்பட ஒருசில திரை நட்சத்திரங்கள் திடீரென இந்தி தெரியாது போடா மற்றும் ஐ எம் எ தமிழ் பேசும் இந்தியன்’ போன்ற வாசகங்கள் அடங்கிய டிசர்ட்களை அணிந்து பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

இந்த ஹேஷ்டேக் ட்ரண்ட் ஆனதை அடுத்து நடிகர் பிரகாஷ் ராஜ் கன்னடத்தில் “நனகே ஹிந்தி பரல்லா ஹோகப்பா” “எனக்கு இந்தி வரலை போங்கப்பா” என்ற வாசகம் தாங்கிய டிஷர்ட்டை அணிந்து அதைத் தொடங்கி வைத்துள்ளார்.