இலவச பஸ் பாஸ் கோரி நந்தனம் கல்லூரி மாணவர்கள் திடீர் போராட்டம்: போலீஸ் குவிப்பு

சென்னை:

லவச பஸ் பாஸ் வழங்கக்கோரி கோரி நந்தனம் கல்லூரி மாணவர்கள் இன்று  திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் குதித்தனர். இதன் காரணமாக கல்லூரி வாசலில் போலீஸ் குவிக்கப்பட்டது.

சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் இன்று வழக்கம் போல வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த நிலையில், மாணவர்கள் ஒரு தரப்பினர், கல்லூரி வளாகத்தில் இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை என குற்றம் சாட்டி, போராட்டத்தில் குதித்தனர். தங்களது போராட்டத்துக்கு அனைத்து வகுப்பு மாணவர்களையும் அழைத்துச் சென்றனர்.

மாணவர்கள் போராட்டம் காரணமாக கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கல்லூரியை சுற்றி குவிக்கப்பட்டனர்.

போராட்டம் குறித்து கூறிய மாணவர்கள்,  தாங்கள் இலவச பஸ் பாஸ் கேட்டு, கல்லூரி நிர்வாகத்திடம் பல முறையிட்டும், இன்னும் எங்களுக்கு இலவச பஸ் பாஸ் கிடைக்கவில்லை. அதன் காரணமாகவே போராட்டம் நடத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.