இயக்குநர் ரவீந்திர மாதவ் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அதர்வா .

இதில் நாயகியாக லாவண்யா திரிபாதி நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து தற்போது அதர்வாவுக்கு வில்லனாக நடிக்க நந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக சக்தி சரவணன், எடிட்டராக கலை, சண்டை இயக்குநராக சரவணன், கலை இயக்குநராக ஐயப்பன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

காவல்துறை அதிகாரியாக அதர்வா நடிக்கவுள்ள புதிய படத்தின் வில்லனாக நந்தா ஒப்பந்தம்…!