சுந்தர்.சி தயாரிப்பில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நந்தினி’ சீரியல் நித்யா ராமுக்கும் தொழிலதிபரான கவுதமுக்கும் திருமணம் நடைபெற்றது.

சில நாட்களுக்கு முன்பு நித்யா ராமுக்கும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதமுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இந்நிலையில், தற்போது தனது திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நித்யா ராம். அவருக்கு சீரியல் நடிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்து வருகிறார்கள்.

முன்பாக, 2014-ம் ஆண்டு வினோத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் நித்யா ராம். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.