ட்ரெண்டாகும் ‘ஐபிசி 376 ‘ படத்தில் வெறித்தனமாக சாமி ஆடிய நந்திதா வீடியோ….!

இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கிய அட்டகத்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை நந்திதா.

இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது.

இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஐபிசி 376 என்ற படத்தில் அதிரடி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இப்படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்கியுள்ளார். இப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வருகிறது.

லாக்டவுனுக்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால் சமீபத்தில் தான் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முடிந்தது.

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அங்காளி தாயே பாடலின் லிரிக் வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த பாடல் முழுக்க நந்திதா நடுரோட்டில் வெறித்தனமாக சாமி ஆடுகிறார். .