பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது.

இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்‌ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படம் உருவாகி வருகிறது.

விறுவிறுப்பாக தயாராகி வரும் இப்படத்தில் கே.தில்ராஜ் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். எடிட்டர் நிர்மல் எடிட்டிங் பணியை கவனிக்கிறார். பவர்கிங் ஸ்டுடியோ சார்பாக எஸ்.பிரபாகர் படத்தை தயாரித்துள்ளார்.

https://twitter.com/Nanditasweta/status/1276494585422680066

தமிழ் தெலுங்கு என இருமொழிகளில் தயாராகி வரும் இப்படத்தின் டப்பிங் வேலைகளும் நிறைவடைந்தது. தற்போது இதன் ப்ரீ டீஸர் வெளியானது. விரைவில் இதன் டீஸர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.