ட்விட்டரில் டிரெண்டாகும் #நன்றிகெட்டவிஜய் ஹேஷ்டேக்….!

 

 

அனைத்து இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற பெயரில் விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் கட்சி பெயரை பதிவு செய்துள்ளார்.

இந்த கட்சிக்கும், தனக்கும் எந்தவித தொடர்பு இல்லை என்று கூறிய விஜய் தன் ரசிகர்கள் அந்த கட்சியில் இருந்து தள்ளி இருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அப்பா கட்சி துவங்கியது எப்படி மகனுக்கு தெரியாமல் இருக்கும் என கேள்வி எழுப்பிய சமூகவலைத்தளவாசிகள் #நன்றிகெட்டவிஜய் என்கிற ஹேஷ்டேகை ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாக்கி விட்டுள்ளனர்.

கட்டப்பா அமரேந்திர பாகுபலியை முதுகில் குத்திய புகைப்படத்தை வைத்து விஜய்யை கிண்டல் செய்து மீம்ஸ் போட்டுள்ளனர்.