3 பிரிவுகளின் கீழ் தேர்தல் வழக்கு பதிவு: சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா? வசந்தகுமார் ஆவேசம்

நெல்லை:

டைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதிக்குள் விதிமுறைகளே மீறி  நுழைய முயன்றதாக,  காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் காவல்நிலையத்தில் வைக்கப்பட்ட நிலையில், அவர்மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வசந்தகுமார், சாலையில் செல்லக்கூட உரிமையில்லையா என்றவர், நாடாளுமன்ற உறுப்பினரான என்னை கைதி போல அழைத்து வந்தனர் என்று   ஆவேசமாக கூறினார்.

நாங்குநேரி தொகுதியில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. அங்கு காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி  நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  இந்த நிலையில், இடைத்தேர்தல் நடைபெற்று வரும் நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்ற கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமார் கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் விதிகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாரை தடுத்து நிறுத்திய போலீசார் அவரை கைது செய்தனர்.

தேர்தல் முடியும் வரை மாலை 6 வரை காவல் நிலையத்தில் வைக்கப்படுவார்  என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்படு கிறது. தொடர்ந்து, நாங்குநேரி காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் தேர்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ள்ளது.

இதுகுறித்து  நாங்குநேரி காவல் நிலையத்திற்கு முன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த எம்.பி.வசந்தகுமார், பாளையங் கோட்டையில் எனக்கு வீடு உள்ளது. எது வீட்டிற்கு சென்றபோது, போலீசார் கைது செய்துள்ளனர். சாலையில் செல்ல கூடாதா? என்றும்  கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சி தோல்லி பயத்தினால் கைது செய்துள்ளனர். தம்மை ஒரு கொலைகாரன் போல் போலீசார் அழைத்து வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

கார்ட்டூன் கேலரி