காங்கிரஸ்: நாங்குநேரியில் எச்.வசந்தகுமார், விளவங்கோட்டில் விஜயதரணி

vij1

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 41 தொகுதிகளில், முதற்கட்டமாக 33 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். நாங்குநேரியில் எச்.வசந்தகுமாரும், விளவங்கோட்டில் விஜயதரணியும் போட்டியிடுகின்றனர்.

41 தொகுதிகள் ஒதுக்கீடு

நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டுவந்தனர்.

காங்கிரஸ் கட்சியின் உத்தேச வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு கட்சி தலைமைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று இரவு டெல்லியில் இருந்து, காங்கிரஸ் சார்பில் தமிழக சட்டமன்ற தேர்தலில் 33 தொகுதிகளில் போட்டியிடும் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

ஓசூர்

1. திருத்தணி – ஏ.ஜி.சிதம்பரம்

2. அம்பத்தூர் – ஹசன் மவுலானா

3. ராயபுரம் – ஆர்.மனோ

4. சோளிங்கர் – ஏ.எம்.முனிரத்தினம்

5. ஓசூர் – கே.கோபிநாத்

6. கலசப்பாக்கம் – செங்கம் ஜி.குமார்

7. ஆத்தூர் (தனி) – எஸ்.கே.அர்த்தனாரி

8. சங்ககிரி – டி.கே.ராஜேஸ்வரன்

9. நாமக்கல் – டாக்டர் ஆர்.செழியன்

10. தாராபுரம் (தனி) – வி.எஸ்.காளிமுத்து

முசிறி

11. கோபிசெட்டிப்பாளையம் – எஸ்.வி.சரவணன்

12. உதகமண்டலம் – ஆர்.கணேஷ்

13. சூளூர் – வி.எம்.சி.மனோகரன்

14. கோவை (தெற்கு) – மயுரா எஸ்.ஜெயக்குமார்

15. வேடச்சந்தூர் – ஆர்.சிவசக்திவேல் கவுண்டர்

16. கரூர் – கே.சுப்பிரமணியம்

17. திருச்சி (கிழக்கு) – ஜி.ஜெரோம் ஆரோக்கியராஜ்

18. முசிறி – எஸ்.விஜயா பாபு

19. ஜெயங்கொண்டம் – ஜி.ராஜேந்திரன்

20. காட்டுமன்னார்கோவில் (தனி) – டாக்டர் கே.ஐ.மணிரத்தினம்

தென்காசி

21. வேதாரண்யம் – பி.வி. ராஜேந்திரன்

22. நன்னிலம் – எஸ்.எம்.பி. துரைவேலன்

23. பாபநாசம் – டி.ஆர். லோகநாதன்

24. பட்டுக்கோட்டை – கே.மகேந்திரன்

25. அறந்தாங்கி – எஸ்.டி. ராமச்சந்திரன்

26. காரைக்குடி – கே.ஆர். ராமசாமி

27. மதுரை (வடக்கு) – வி.கார்த்திகேயன்

28. திருமங்கலம் – ஆர்.ஜெயராம்

29. முதுகுளத்தூர் -எஸ்.பாண்டி

30. தென்காசி – பழனி நாடார்

விஜயதரணி

31. நாங்குநேரி – எச்.வசந்தகுமார்

32. குளச்சல் – ஜெ.ஜி. பிரின்ஸ்

33. விளவங்கோடு – விஜயதரணி

மீதமுள்ள 8 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. கடந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 5 பேரில், 2 பேர் (ஜான் ஜேக்கப், ரெங்கராஜன்) ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சென்றுவிட்டனர். ஏனைய 3 பேருக்கும் (விஜயதரணி, ஜெ.ஜி.பிரின்ஸ், கே.கோபிநாத்) மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி