நானியின் ஜென்டில்மேன் காப்பி தானாம் மாஸ்டர் படத்தின் செகென்ட் லுக்….!

விஜய்யின் அறுபத்தி நான்காம் படமான மாஸ்டர் படத்தை மாநகரம் புகழ் லோகேஷ் கனகராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கிறார்.

இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார் . விஜய் சேதுபதியுடன் ஆண்ட்ரியா , ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹன் உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் எடிட்டிங் கவனிக்க ‘ஸ்டண்ட்’ சில்வாவின் ஸ்டண்ட் இயக்கம் மற்றும் சதீஷ்குமாரின் கலை இயக்கம் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையில் லோகேஷ் கனகராஜுக்கு உதவி செய்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார். படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தீனா ஒப்பந்தமாகியுள்ளார்.

பொங்கல் விருந்தாக மாஸ்டர் படத்தின் செகென்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர் படக்குழு. அந்த போஸ்டரில் விஜய் உஷ் என்று சைகை செய்வது போன்று இருந்தது. அதை பார்த்த சினிமா ரசிகர்கள் போஸ்டர் நானி படம், ஹோம்லேண்ட் தொடரில் இருந்து காப்பியடிக்கப்பட்டது என்று கூறி இன்னும் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். விஜய் புகைப்படத்தை வைத்து ஏகப்பட்ட மீம்ஸுகள் போடப்பட்டுள்ளன.