நானி நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ …..!

‘வி’ படத்தைத் தொடர்ந்து ‘டக் ஜெகதீஷ்’ என்ற பெயரிடப்பட்டுள்ள படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நானி.

இந்தப் படத்தைத் தொடர்ந்து நானி நடிக்கவுள்ள புதிய படம் ‘ஷியாம் சிங்கா ராய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது .இன்று (அக்டோபர் 25) சரஸ்வதி பூஜையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. நிஹாரிகா எண்டர்டையின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தை ராகுல் சாங்கிருத்யன் இயக்கவுள்ளார்.

ஒளிப்பதிவாளராக சனு ஜான் வர்க்கீஸ், இசையமைப்பாளராக மிக்கி ஜே.மேயர், எடிட்டராக நவீன் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

இந்தப் படத்தில் நானிக்கு நாயகிகளாக சாய் பல்லவி மற்றும் க்ரித்தி ஷெட்டி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.