ஏக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கிவிட்டது. விஜய் டி.வி . என்றாலே பிரம்மாண்டம், தவிர கமல் தொகுத்து வழங்குகிறார் என்றதும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பு எகிறியது.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சி குறித்த விளம்பரங்கள் வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க வைத்தது.

இந்த நிலையில் நேற்று, நிகழ்ச்சி துவங்கியது. இதில் கலந்துகொள்ள இருப்பவர்களின் பெயர்கள் ரகசியமாக வைக்கப்பட்டதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

 

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, பாடலாசிரியர் சிநேகன், ஸ்ரீ (மாநகரம் கதாநாயகன்),நடிகை அனுயா, வையாபுரி, ஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்), ஓவியா,ரேசா,பரணி,காயத்ரி ரகுராம்,ஆர்த்தி, கணேஷ் கணேஷ் வெங்கட்ராம், ஷக்தி வாசுதேவ் ஆகியோர் கலந்துகொண்டனர். திரைபிரபலம் அல்லாத  ஜுலி என்ற பெண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வித்தியாசமாக முழக்கங்கள் இட்டு பிரபலமானவர்.

அதோடு சர்ப்ரைஸாக நடிகை நமீதாவும் 15வது நபராக கலந்துகொண்டார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பவர்கள் என்று சில ஊடகங்களில் வி.ஐ.பி. பட்டியல் ஒன்று வெளியானது. அதில் அரசியல் பிரமுகர்கள் நாஞ்சில் சம்பத், ஹெச்.ராஜா ஆகியோர் நடிகை அமலாபால் ஆகியோர் பெயர்கள் இருக்கவே ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமானது.

ஆனால் இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை. இது ரசிகர்களிடைய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. தங்களது ஏமாற்றத்தை பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.

நாஞ்சில் சம்பத், ஹெச்.ராஜா, அமலா பால் ஆகியோர் ஏன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை?

இவர்களை இந்த நிகழ்ச்சிக்காக விஜய் டிவி அணுகவே இல்லையாம்.

 

“ஹெச்.ராஜா, நாஞ்சில் சம்பத் ஆகியோர் அரசியலில் முக்கிய பிரமுகர்கள். அன்றாடம் கூட்டங்கள், அறிக்கைகள், தொலக்காட்சி நிகழ்ச்சிகள் என்று கலந்துகொண்டு இருப்பவர்கள். அதே போல நடிகை அமலா பால், சில திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவர்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக.. அதாவது நூறு நாட்கள்.. இவர்கள் பிக்ஸ் பாஸ் நிகழ்ச்சிக்காக வெளியுலக தொடர்பு இல்லாமல் இருப்பார்களா என்ற சந்தேகம் பிக்பாஸ் டீமுக்கு இருந்தது.

ஆகவே இவர்களை பிக்பாஸ் டீம் அணுகவே இல்லை” என்கிறார்கள்.

“அடப்பாவிகளா.. அப்புறம் எப்படி இவர்கள் பெயர்கள் யூகப் பட்டியிலில் வெளியானது” என்றால்.

“ஏதோ, யூகத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்” என்கிறார்கள்.

இது எப்படி இருக்கு?