சென்னை: 

மைப்பின் பெயர் அறிவிப்பு காரணமாக நாஞ்சில் சம்பத் விலகியது வருத்தமளிப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

அரசியலில் இருந்து விலகியதாக அறிவித்துள்ள நாஞ்சில் சம்பத்,  தினகரனின் புதிய அமைப்பின் பெயரில் தனக்கு விருப்பம் இல்லை என்றும் அண்ணாவும் திராவிடமும் இல்லாத அணியில் என்னால், அண்ணா, திராவிடம் என்பதை தவிர்த்து விட்டு பேச முடியாது.

அண்ணாவையும் திராவிடத்தையும் அலட்சியப்படுத்தி விட்டு கட்சி நடத்தலாம் என தினகரன் நம்புகிறார். அவரது நம்பிக்கை வெற்றி பெற வாழ்த்துக்கள். ஆனால், அதில் நான் இல்லை. இனிமேல் நான் எந்த அரசியலிலும் நான் இல்லை என்றும் தன்னை இனிமேல் இலக்கிய மேடைகளில் காணலாம் என்றும்  இன்று அதிரடியாக அறிவித்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், நாஞ்சிம் சம்பத் குறித்து விளக்கமளித்தார். அப்போது,  திராவிடத்தை புறக்கணித்து விட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. அண்ணா, திராவிடத்தை புறக்கணிக்கவில்லை. பெயர் காரணம் கூறி வெளியேறியிருப்பது வருத்தமளிக்கிறது என்று கூறினார்.

நாஞ்சில் சம்பத்தை தான் விமர்சிக்க விரும்பவில்லை என்ற அவர், ஜெயலலிதாவை அவமதிக்கும் வகையில் நாஞ்சில் சம்பத் பேசியுள்ளார். பெரியார், அண்ணா, எம்ஜிஆரின் மொத்த உருவம்தான் ஜெயலலிதா என்றும் கூறினார்.

தனது அமைப்புக்காக தேர்தல் ஆணையத்தில் கட்சிக்கு 3 பெயர்களை கொடுத்திருந்ததாக தெரிவித்த டிடிவி, ஆனால், தேர்தல் ஆணையம் எங்கள் அமைப்புக்கு 3 பெயர்களை வழங்கியது. அதில் ஒரு பெயரை தேர்வு செய்தோம் என்றும் தெரிவித்தார்.

மேலும், தங்களது கொடி கருப்பு சிவப்பு வெள்ளை நிறத்தில் உள்ளதாகவும், இதுபோன்ற கொடியை பயன்படுத்தக்கூடாது என யாரும் காப்புரிமை பெறவில்லை என்று கூறிய அவர், . எங்கள் கொடியில் 50 சதவீதம் வெள்ளை நிறம். அதன் நடுவில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை இடம்பெறச் செய்துள்ளோம், எதற்காக அதிமுகவினர் இதை எதிர்க்கின்றனர் என்பது தெரிய வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.