புது நெல்லு புது நாத்து, சீவலப்பேரி பாண்டி, கிழக்குச் சீமையிலே, கரிசக்காட்டுப் பூவே என பல படங்களில் நடித்து, தன் நடிப்புத் திறமையால் பலரது நெஞ்சங்களில் நீங்காத இடம் கொண்டுள்ளவர் நடிகர் நெப்போலியன்.
தற்போது நெபோலியனின் முதல் ஹாலிவுட் (Hollywood) படமான ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நெயின் ரோக்’ டிஜிட்டல் தளத்தில் விரைவில் வெளிவரவுள்ளது.
இப்படத்தில் நெப்போலியன் ஒரு அருங்காட்சியக கண்காணிப்பாளராக பணிபுரிகிறார். மேலும் இப்படத்தில் ஜெசி ஜென்சன், நாதன் கேன் மேதர்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள். ‘கிறிஸ்துமஸ் கூபன்’ (Christmas Coupun) மற்றும் ‘ட்ராப் சிடி’ (Trap city) ஆகிய இரு ஹாலுவுட் படங்களிலும் நெப்போலியன் நடித்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து ஜூம் அழைப்பு மூலம் பேசிய நெப்போலியன், கொரோனா தொற்று காரணமாக திரைப்படங்கள் திரை அரங்குகளை எட்ட முடியாத நிலை உள்ள இன்றைய சூழலில், OTT தளங்களில் படங்கள் வெளிவருவது ஆறுதல் அளிக்கும் விஷயமாக இருப்பதாக கூறினார்.