கமதாபாத்

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அந்தக் காலத்தில் நாரதர் கூகுளைப் போல் அனைத்தும் தெரிந்தவராக இருந்துள்ளார் என கூறி உள்ளார்.

பாஜகவினர் இந்தியாவில் அந்தக் காலத்தில் இருந்தே விஞ்ஞான முன்னேற்றம் இருந்துள்ளது எனப் பேசி வருகின்றனர்.     மகாபாரதக் காலத்தில் இண்டர்நெட் இருந்ததாகவும்  ஆகாய விமானம் கண்டு பிடிக்கும் முன்பே புஷ்பக விமானங்கள் புழக்கத்தில் இருந்ததாகவும் கூறி வருகின்றனர்.   இவ்வகையில் குஜராத் முதல்வர் ஒரு புதிய செய்தியை வெளியிட்டுள்ளார்.

அகமதாபாத்தில் ஆர் எஸ் எஸ் கிளை அமைப்பின் சார்பாக நாரத மகரிஷி ஜெயந்தி சிறப்பாக கொண்டாடப்பட்டது.  அந்நிகழ்வில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர், “நாரதர் அந்தக்காலத்தில் அனைத்து தகவல்களையும் அறிந்திருந்தார்.   அவர் தனக்கு கிடைக்கும் அனைத்து தகவல்களையும்  மற்றவர்களுக்குஅளிப்பார்.

தற்போது தகவல்கள் அளிப்பதில் கூகுள் முன்னோடியாக உள்ளது தெரிந்ததே.   அதனால் அந்தக் கால கூகுள் நாரதர்தான் எனக் கூறலாம்.  அவர் அறியாத தகவல் இல்லை.    மனிதர்களுக்கும் தேவர்களுக்கும் அவரவர் கேட்கும் தகவலை அளிக்க அப்போது நாரதர் இருந்து வந்துள்ளார்.”  என தெர்வித்துள்ளார்.