‘துருவங்கள் 16’ படத்தைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.

பைனான்ஸ் சிக்கலால், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது.

இதனிடையே, தனது போட்டோ ஷுட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் கார்த்திக் நரேன், அதில் ரசிகர் ஒருவர் நரகாசுரன் ரிலீஸ் பற்றி கேட்டமைக்கு “மார்ச் 2020-ல் உறுதியாக வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.