டிஜிட்டலில் வெளியிடப்படுகிறதா கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’….?

‘துருவங்கள் 16’ படத்துக்குப் பிறகு கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான படம் ‘நரகாசூரன்’. அரவிந்த் சாமி, ஸ்ரேயா சரண், சந்தீப் கிஷன், ஆத்மிகா, இந்திரஜித் ஆகியோர் நடித்துள்ள இப்படத்தை கெளதம் மேனன், கார்த்திக் நரேன் மற்றும் பத்ரி கஸ்தூரி இணைந்து தயாரித்துள்ளனர்.

பைனான்ஸ் சிக்கலால், இந்தப் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இப்போது அனைத்து பிரச்சினைகளும் சுமுகமாக முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

தற்போது ‘நரகாசூரன்’ படத்தை டிஜிட்டலில் வெளியிடலாமா என்று ஆம், இல்லை எனத் தேர்வு செய்யச் சொல்லி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி பிரிவில் கேட்டுள்ளார் இயக்குநர் கார்த்திக் நரேன்.