கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி போர்க்கொடி

மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கும் அமைப்பான நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற புதுச்சேரி மாநிலத்தில் முதலமைச்சரான நாராயணசாமி துணைநிலை ஆளுநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். சில நாட்களாக மாநில அரசின் நடவடிக்கைகளில் துணைநிலை ஆளுநரின் தலையீடு அதிகளவில் இருப்பதாக நாரயணசாமி குற்றம்சாட்டி வந்தார்.
narayanasamy
இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற நிடி ஆயோக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜல், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கிரண்பேடிக்கு எதிராக நாராயணசாமி குரலெழுப்பினார். மாநில அரசின் நடவடிக்கைகளில் ஆளுநரின் தலையீடு அதிகாரிகளுக்கு இணையாக இருப்பதாக கூட்டத்தில் நாராயணசாமி தெரிவித்தார். கூட்டத்தில் நாராயணசாமி யாரையும் குறிப்பிடாமல், கூடுதல் அரசியலமைப்பு வழிவகைகளில் இருந்து செயல்பட்டு வருபவரிடம் இருந்து தினமும் குறுக்கீடுகள் வருவதாக மறைமுகமாக சாடினார். இது புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை குறிப்பதாகவே இருந்தது.

அதன்பிறகு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து நாராயணசாமி பேசினார். அப்போது புதுச்சேரியின் துணைநிலை ஆளுநரை மாற்றுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. நாராயணசாமி சந்திப்பு கிரண்பேடிக்கு மட்டுமில்லாமல் மாநில அரசு நடவடிக்கைகளில் தலையிடும் அதிகாரிகளை குறிப்பிடுவதாக இருந்தது. அரசின் நடவடிக்கைகளில் வாட்சப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வளைதளை பயன்படுத்துவதாக கிரண்பேடி மீது நாராயணசாமி குற்றம்சாட்டினார்.

துணைநிலை ஆளுநர் மீதான புகார் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ” கூட்டத்தில் பேசிய அனைத்தையும் வெளியில் சொல்ல முடியாது” என நாராயணசாமி பதிலளித்தார். டெல்லியின் நிலைமை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த நாராயணசாமி இரு யூனியன் பிரதேசங்களுக்கும் உள்ள வேறுபாட்டை வலியுறுத்தினார்.