புதுச்சேரியில் அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நாராயணசாமி சந்தித்து  ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் –  திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. புதுவை காங்கிரஸ் தலைவர்களானவைத்தியலிங்கம், நமசிவாயம், நாராயணசாமி ஆகியோ மூவர், முதல்வர் பதவிக்காக கடும் போட்டி நிலவியது. இதன் காரணமாக ஒருவார காலம் அங்கு குழப்பம் நிலவியது. இந்த நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

நாராயணசாமி
நாராயணசாமி

 
ஐந்து பேருக்கே அமைச்சர் பதவி வழங்க முடியும் என்பதால்,  அமைச்சர்கள் பட்டியலை இறுதி செய்ய முடியாமல் முதல்வர் நாராயணசாமி தவிக்கிறார். இந்த நிலையில்  காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை இன்று டில்லியில் சந்தித்துப் பேசினார் நாராயணசாமி.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, அமைச்சர்கள் பட்டியல் குறித்து ஓரிரு நாளில் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
முதல்வர் பதவியை எதிர்பார்த்து ஏமாற்றத்தில் இருக்கும் நமசிவாயம், துணை முதல்வர் பதவியை விரும்புவதாகவும்,  முன்னாள் அமைச்சர்கள் வைத்திலிங்கம், கந்தசாமி, ஷாஜகான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோரும் அமைச்சர் பதவியை கைப்பற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் பேசப்படுகிறது.