நியூசிலாந்து தீவிரவாத தாக்குதல் குறித்து மவுனம் சாதிக்கும் பிரதமர் மோடி

புதுடெல்லி:

தீவிரவாத தாக்குதல்களுக்கு விரைந்து கண்டனம் தெரிவிக்கும் பிரதமர் மோடி, நியூசிலாந்து தீவிரவாத தாக்குதலை ட்விட்டரில் கண்டிக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.


நியூசிலாந்தில் மசூதிகளில் ஆஸ்திரேலிய தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 50 பேர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 5 பேர் இந்தியர்கள்.

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து நியூசிலாந்து பிரதமர் ஜெஸிந்தா ஆர்டனுக்கு எழுதியதோடு சரி. தீவிரவாத தாக்குதல் குறித்து ஒரு வார்த்தைகூட பிரதமர் மோடி குறிப்பிடாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இத்தனைக்கும் நம் இந்தியர்கள் 5 பேர் அந்த தாக்குதலில் உயிரிழந்தபின்பும், அது குறித்து பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? என்ற கேள்வி பல தரப்பிலிருந்து எழுந்து கொண்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.