ரேந்திரமோடி இந்தியாவை எப்படியெல்லாம் காப்பாற்றுவார் என எண்ணி  ஓட்டுப்போட்டவர்கள் எ ல்லாம் இப்போது இவருக்காக ஓட்டு போட்டோம் என்று எண்ணும் அளவுக்கு செய்துவருகிறார் பாரத பிரதமர் திருவாளர் நரேந்திரமோடி

சில வாரங்களுக்கு முன்பு, புல்வாமா தாக்குதலி 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்ததையடுத்து பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதுபற்றி, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, தாக்குதலுக்கு திட்டமிட்ட நாளில், வானிலை மோசமாக இருந்ததால், வேறு ஒரு நாளில் தாக்குதல் நடத்தலாம் என நிபுணர்கள் தெரிவித்ததாகவும், ஆனால், மேகங்களால், இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார் கண்காணிப்பில் இருந்து தப்பிவிடும் என்பதால் தாக்குதல் நடத்த அனுமதி அளித்ததாகவும் கூறியிருந்தார், அந்த பேட்டியே ஏற்கனவே எழுதிக்கொடுத்து பேசிய பேட்டி என்று சமூக ஊடகங்களில் திரு.நரேந்திமோடியை துவைத்து எடுக்கிறார்கள் நெட்டிசன்கள்

இந்நிலையில் 1987-88 காலத்தில் திரு.எல். கே அத்வானி அவர்களின் குஜராத் விராம்கம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அத்வானி அவர்களை டிஜிட்டல் கேமிரா வழியாக புகைப்படம் எடுத்ததாகவும்  அதை அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தினை பார்த்த அத்வானி அவர்கள் எப்படி புகைப்படம் கலரில் என்று ஆச்சர்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்

இந்த பேட்டி வெளியான நிமிடத்தில் இருந்து நெட்டிசன்கள் நமது பாரத பிரதமரை கேள்விகளால் துளை எடுக்கின்றனர்.

இந்தியாவில் நிக்கான் நிறுவனம் 1987 ல் தான் டிஜிட்டல் கேமிராவை அறிமுகப்படுத்தியதாகவும் இந்தியாவின் தொழில்ரீதியான மின்னஞ்சல் சேவை 1990-95 பகுதியில்தால் ஆரம்பிக்கப்பட்ட தாகவும் நெட்டிசன்கள் பிரதமருக்கு தெரியப்படுத்தியிருக்கின்றனர்.

ஏனெனில் அவர் கூறிய 1987-88 கால காட்டத்தில் மின்னஞ்சல் சேவையயே துவங்கப்படவில்லை, பின் எப்படி மின்னஞ்சல் அனுப்பியிருக்க முடியும் என்று கேள்விகள் கேட்டுவருகின்றனர்

இன்னொருவர், ஏழை தாயின் மகன் என்று கூறும் பிரதமர் மோடி 1987-88 காலகட்டங்களில் வசதியானவர்கள் மட்டுமே டிஜிட்டல் கேமிராவும், மின்னஞ்சலும் வைத்திருக்கமுடியும், பின்னர் இவர் எப்படி ஏழைத்தாயின் மகன் என்றும் கேட்டிருக்கிறார்

இன்னமும் தொடர்ந்து அவரை நெட்டிசன்கள் இணையத்தில் கேள்விக்கணைகளை தொடுத்த வண்ணம் இருக்கின்றனர்.

ஒரு அரசியல்வாதியோ அல்லது கட்சித்தொண்டர்களோ ஒரு தகவல்களை பொதுவில் பேசும்போது முறையாக தெரிந்துகொண்டு பேசுவதுதான் எல்லாரிடையேயும் நம்பிக்கையை ஏற்படுத்த முடியும்.

-செல்வமுரளி