நாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் மோடி2 கட்ட பிரசாரம்!

சென்னை:

நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் பிரதமர் மோடி 2 கட்ட பிரசாரம் செய்ய இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்து உள்ளார்.

அதன்படி,  பிப்ரவரி 10, 19-ந்தேதிகளில் பிரதமர் மோடி பிரதமர் மோடி தமிகம் வருகை தர இருப்பதாகவும், அப்போது, சென்னை, மதுரை, கோவை பொதுக்கூட்டங்களில் பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு ஏப்ரல் மே மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரிக்க பிரதமர் மோடி திட்டமிட்டு உள்ளார்.

முன்னதாக வரும் 27ந்தேதி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு வருகை தரும் மோடி, அன்றைய தினம் தமிழக்ததில் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து  மதுரை விமான நிலையம் எதிரே உள்ள ரிங்ரோடு சாலை பகுதியில் இருக்கும் அடல் பிஹாரிவாஜ்பாய்  மைதானத்தில் பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்திலும் மோடி பேசுகிறார்.

இந்த கூட்டத்திற்கு  2 லட்சம் பேரை திரட்ட தமிழக பா.ஜ தலைவர்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதற்கான ஆள்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன.

அதைத்தொடர்ந்து,  அடுத்த மாதம் (பிப்ரவரி)  10ந்தேதி மற்றும் 19-ந்தேதிகளில் பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.  10-ந்தேதி அவர் சென்னையில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கிறார். 19-ந்தேதி  தமிழகம் வரும் மோடி, அன்றைய தினம் கோவையில் நடக்கும் பிரமாண்ட கூட்டத்தில் கலந்து கொண்டு பா.ஜனதாவுக்கு ஆதரவு திரட்டுவார் என்று தெரிகிறது.

பிரதமர் மோடி அடுத்த மாதம் (பிப்ரவரி) 10 மற்றும் 19 ஆகிய 2 நாட்கள் தமிழகத்துக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசையும் கூறி உள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி