கமதாபாத்

னக்கு ஒரு கோடி லஞ்சம் கொடுக்க முன்வந்த பா ஜ க தலைவர் மீது படிதார் அனாமத் அந்தோலன் சமிதி தலைவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

படேல் இன முன்னேற்றத்துக்காக பாடுபடும் அமைப்பு படிதார் அனாமத் அந்தோலன் சமிதி (பாஸ்) ஆகும்.  அதன் தலைவர் நரேந்திர படேல் சமீபத்தில் தனக்கு ரூ. 1 கோடி லஞ்சம் கொடுத்து பா ஜ க வில் சேர நிர்பந்தித்ததாக ஒரு தகவல் வெளியிட்டார்.  அது அரசியல் உலகில் கடும் பரபரப்பை உண்டாக்கியது.

தற்போது நரேந்திர படேல் தனக்கு லஞ்சம் கொடுத்ததாக பா ஜ க வின் குஜராத் தலைவர் ஜிது வகானி மீது வழக்கு பதிந்துள்ளார்.   அவர் அத்துடன் இடைத்தரகராக செயல் பட்டதாக வருண் படேல் மீதும் குற்றம் சாட்டியுள்ளார். வருன் படேல் கடந்த வாரம் படிதார் அமைப்பில் இருந்து பாஜகவில் இணைந்துள்ளார்.    நரேந்திர படேல் இந்த வழக்கில் ஜிது வகானி, வருண் படேல் மட்டுமின்றி பா ஜ கவின் இளைஞர் அணித்தலைவர் ருத்விக் படேல்,  கட்சியின் செய்தித் தொடர்பாளர் பாரத் பாண்டியா ஆகியோர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார்.

ஏற்கனவே படிதார் இயக்கத்தில் இருந்து பா ஜ கவில் சேர்ந்த நிகில் சவானி இந்த லஞ்ச விவகாரம் வெளிவந்ததும் பா ஜ க வை விட்டு விலகியது தெரிந்ததே.