நரிக்குறவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

டெல்லி: நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் குழுவில், பட்டியல் இனத்தவருக்கான சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
a
நரிக்குறவர், குருவிக்காரர்கள், மலையாளி கவுண்டர்களையும் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க வழிவகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டம் ஒப்புதல் அளித்தது.

இது தமிழகம், புதுவை, அசாம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களுக்கு அமலாகும். இதன்மூலம், நரிக்குறவர் இனத்தவர்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேறியுள்ளது.