செயற்கைக் கோளை தாக்கும் இந்திய ஏவுகணையால் அதிகமாகும் குப்பைகள் : நாசா கண்டனம்

வாஷிங்டன்

மெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா இந்தியாவின் ஏ சாட் சோதனையால் கடும் குப்பைகள் அதிகரித்துள்ளதால் சர்வதேச விண்வெளி மையம் பாதிப்படையும் என தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் இந்தியா ஏசாட் என்னும் ஏவுகணை சோதனையை நிகழ்த்தியது. இந்த ஏவுகணை மூலம் வானில் பறக்கும் செயற்கைக் கோள்களை சுட்டு வீழ்த்த முடியும். அவ்வாறு ஒரு செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்த சோதனை நடந்தது இதில் இந்தியா வெற்றி பெற்றதால் தற்போது அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது.

இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஆய்வாளர் ஜிம் பிரிடென்ஸ்டின், “செயற்கைக் கோள்களால் ஏற்கனவே பல குப்பைகள் மற்றும் தூசு மண்டலம் உண்டாகி வருகின்றன. தற்போது இந்தியா நடத்திய ஏசாட் ஏவுகணை சோதனையால் சுட்டு வீழ்த்தப்பட்ட செயற்கைக் கோள் 400 துண்டுகள் குப்பைகளாக காற்றில் மிதந்து வருகின்றன.

இவற்றில் 60 துண்டுகள் 10 செமீக்கும் அதிகமான அளவுள்ளவை ஆகும். இந்த குப்பைகள் தற்போது சர்வதேச விண்வெளி மையத்தின் வட்ட பாதையில் மிதந்துக் கொண்டு உள்ளன. இது மிகவும் அபாயகரமான விஷயமாகும். இது தவிர கண்டறியப்படாத துகள்களும் மிதக்கின்றன. இதனால் மேலும் பல அபாய விளைவுகள் ஏற்படலாம்.

இந்தியா தற்போது சோதனை செய்ததைப் போல் வேறு நாடுகளும் எதிர்காலத்தில் இதே சோதனைகலை மேற்கொள்ளலாம். அதை யாராலும் எஏறுக் கொள்ள முடியாது. அத்துடன் இத்தகைய சோதனைகளால் கடும் பின் விளைவுகள் ஏற்படும் அது குறித்து நாசா ஆராய உள்ளது. இந்தியா இது குறித்து ஏவுகணை சோதனைக்கு முன்பு சிந்தித்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.