நியூயார்க்:

சந்திரனுக்கு பயணம் செல்வதற்கான போயிங் ராக்கெட் தயாரிப்பில் தாமதம் ஏற்படுவதால், மாற்று ஏற்பாடு குறித்து நாசா விரைவில் முடிவு செய்யும் என்று தெரிகிறது.

LH2 Stack on Aft Sim

சந்திரனுக்கு செல்வதற்கான போயிங் ஏவுகணை தயாரிப்பை கடந்த 2012-ல் நாசா தொடங்கியது.
2020-ல் ஆளில்லா விமானத்தை சந்திரனுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

ஆனால், தொழில்நுட்ப பிரச்சினை காரணமாக, போயிங் ராக்கெட் தயாரிப்பை தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டில் கடந்த மார்ச் 13-ம் தேதி செனட் கூட்டத்தில் அறிவித்தார்.

இதற்கு மாற்று ஏற்பாட்டை நாசா 2 வாரங்களில் தெரிவிக்கும் என்றும் அவர் கூறினார்.