புதிய பூமி – நாசாவின் கண்டுபிடிப்பு

லக அளவில் விண்வெளி ஆய்வுக்குப் பெயர் போனது நாசா நிறுவனம், இன்றும் தொடர்ந்து மிக அதிக அளவில் செலவு செய்து ஆராய்ந்து வருவதும் நாசா நிறுவனம்.

நாசா நிறுவனம் நமது மனிதர்கள் வாழத்தகுந்த புதிய பூமியைக் கண்டறிந்துள்ளதாகத் தெரிவித்து உள்ளது. அந்த அதிசய கிரகமானது நம் புவியை விட 6 மடங்கு பெரியதாகவும் 31 ஒளி ஆண்டு களில் அடையக்கூடியதாகவும் இருக்கிறது.

இந்த புதிய கிரகத்திற்கு GJ 357 d என்று பெயர் சுட்டப்பட்டுள்ளது, ஹைபோவின் விண்மீன் கூட்ட மண்டலத்தில் ஒரு குள்ளமான விண்மீனையும், அதன் நட்சத்திர பகுதிகளுக்குள் வாழக்கூடிய  உள்ள நீர் இருப்பதால் மனிதர்கள் வாழத்தேவையான சரியான நிலைமைகளையும் கொண்டிருக்கலாம் என்று CNN கூறியுள்ளது.

வெகு குறைவான தொலைவில் (31 ஒளி ஆண்டு), மனிதர்கள் வாழ ஏற்ற கிரகமாக இருப்பதால் வெளிக் கிரகத்தில் வாழ முடியுமா என்ற மனிதக் குலத்தின்  தேடலில் கிடைத்த அரிய பொக்கிசமாக இந்த கிரகம் கிடைத்துள்ளது

இந்த கிரகத்தின்  சராசரி வெப்பநிலை சுமார் -64 டிகிரி ஃபாரன்ஹீட்டாக (-53 டிகிரி செல்சியஸ்) இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது,

நாசாவின் நாசா டிரான்ஸிட்டிங் செயற்கைக்கோள் (TESS) மூலம் இந்த கிரகம் கண்டுபிடிக்கப் பட்டது.

சுமார் 85 சதவிகித நமது விண்வெளியினை  ஆய்வு செய்வதற்காகத் துவங்கப்பட்ட  TESS தனது விண்வெளி இயக்கத்தை ஜூலை 2018 அன்று தொடங்கியது. செயற்கைக்கோள் இதுவரை நமது சூரிய அமைப்புக்கு வெளியே 20க்கும் மேற்பட்ட கோள்களைக் கண்டுபிடித்துள்ளது.

தொடர்ந்து மனிதர்கள் வாழக் கூடிய நிலையாக நல்ல கிரகங்களைக் கண்டறிந்தால் மனிதக் குலத்திற்கு இன்னமும் பயனளிக்கும்.

-செல்வமுரளி

கார்ட்டூன் கேலரி