வருகிறது  முழு சூரிய கிரகணம்: நாசா எச்சரிக்கை!

 

இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி முழு சூரிய கிரகணம் தோன்றும் என நாசாஅறிவித்துள்ளது.  சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள நீள் வட்டப்பாதையை நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைக்கும் நிகழ்வு ஆகும்.   கிரகணத்தில்,  முழு கிரகணம், பகுதி கிரகணம், கங்கண கிரகணம், கலப்பு கிரகணம் என பல வகைகள் உள்ளன.   இதில் உள்ள சிறப்பு 99 ஆண்டுகளுக்குப் பின்னர் தோன்றும் முழு சூரிய கிரகணம் என்பதாகும்.  அதன்படி இந்த கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும்.

 

இந்த சூரிய கிரகணத்தை பார்க்க விரும்பும் மக்களுக்கு நாசா சில பாதுகாப்பு அறிவுரைச் செய்திகளை வழங்கியுள்ளது.  அதன்படி இந்த கிரகணத்தில் சூரியனின் விளிம்புகள் மட்டுமே தெரியும். இதை வெற்றுக் கண்களால் பார்ப்பது கண் பார்வையை பாதிக்கும் வாய்ப்புள்ளது என்றும் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளித் தடுப்புக் கண்ணாடிகளை அணிந்து மட்டுமே பார்க்க வேண்டும் என்றும் நாசா கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

இந்த கிரகணத்தை  உலகம் முழுவதும் பல பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 கோடி மக்களால் பார்க்க முடியும்.

 

Leave a Reply

Your email address will not be published.