செவ்வாய் கிரகத்தின் தரையை தோண்டும் நாசாவின் இன்சைட் லேண்டர்

ஃப்ளாரிடா: நாசாவின் இன்சைட் லேண்டர், செவ்வாயின் தரைப் பகுதியில் சுமார் 2 செ.மீ அளவிற்குத் தோண்டியுள்ளது. விண்கலத்தின் இயந்திரக் கைகள் வெப்ப செய்முறைக் கருவி மூலம் இதனை செய்துள்ளது என நாசா விண்வெளி மையம் அறிவித்துள்ளது.

தற்போது வெப்பமுறை செய்முறைக் கருவி மூலம் 2 செ.மீ துளைத்திருந்தாலும் அக்கருவி 16 அடி (2 மீட்டர்) ஆழத்திற்கு செவ்வாயின் தரையில் உட்செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருப்பதாக நாசா கூறியுள்ளது.

இந்த வருடம் பிப்ரவரியில் இம்முயற்சி மெற்கொள்ளப் பட்டாலும் மிகக் குறைவான அளவே வெற்றி கிடைத்தது. தற்போது, இந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டது புதிய வழிமுறையைக் கையாண்டதே எனவும் அமெரிக்க விண்வெளி மையம் கூறுகிறது.

எதிர்பாராத அளவு கடினத் தன்மை கொண்டிருந்த செவ்வாய் கிரகத்தின் தரையை இயந்திரக் கைகள் கொண்டு தோண்டும் முறை மிகவும் உதவிகரமாக உள்ளதெனவும், இவ்வாறு இல்லையெனில் தோண்டும் கருவி வெறுமென மேலெழும்புதலே நிகழும் எனவும் நாசா கூறியது.

கார்ட்டூன் கேலரி