பிளாரிடா: செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில், சிறிய ஹெலிகாப்டர் ஒன்றை பறக்கவிட்டு ஆராயும் திட்டத்தை செயல்படுத்தவுள்ளது அமெரிக்கவின் நாஸா விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இன்னும் 3 அல்லது 4 நாட்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. வெறும் 40 வினாடிகள் செவ்வாய் கிரகத்தின் பரப்பிலிருந்து சிறிது உயரத்துக்கு இந்த ஹெலிகாப்டர் பறக்க உள்ளது.

இதன் புகைப்படங்களை பர்சிவியரன்ஸ் ரோவர் வெளியிடும். இதற்காகவே இந்த ரோவரில் அதிநவீன கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. விமானத்தை முதன்முதலில் கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள் இதுபோலவே பரிசோதனை முயற்சியாக பூமியின் தரையிலிருந்து தாங்கள் வடிவமைத்த சிறிய விமானத்தை பறக்க விட்டனர்.

தற்போது செவ்வாய் கிரக பரப்பிலிருந்து சிறிய ஹெலிகாப்டரை பறக்க விடுவது ரைட் சகோதரர்களைப் போன்று தங்களுக்கும் சவாலான விஷயம் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.