வாஷிங்டன்:

சூரியனின் உள்சக்தியை நீண்ட காலத்துக்கு அளவீடு செய்யும் வகையில் புதிய கருவியை சர்வதேச வின்வெளி மையத்தில் நாசா நிறுவியுள்ளது.

’’டோட்டல் மற்றும் ஸ்பெக்டரல் சோலார் இராடியன்ஸ் சென்சார் (டிஎஸ்ஐஎஸ்&1) என்ற இந்த கருவி அனைத்து அறிவியல் சார்ந்த தகவல்களை இந்த மாதம் முதல் சேகரிக்கிறது’’ என்று நாசா தெரிவித்துள்ளது.

‘‘பூமியின் கதிர்வீச்சில் சூரியனின் அழுத்தம், ஓசோன் படலம், வழிமண்டல சுழற்சி, சுற்றுசூழல் ஆகியவற்றை நாம் புரிந்துகொள்ள இந்த கருவி உதவி செய்யும். பூமி இயக்கத்தில் சூரியனின் மாறுபாடு, பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் தாக்கத்தையும் அறிந்து கொள்ள முடியும்’’ என்று நாசா டிஎஸ்ஐஎஸ் திட்ட விஞ்ஞாணி டோங் வு தெரிவித்துள்ளார்.

‘‘சென்சார் மூலம் கிடைக்கும் தகவல்கள் பூமியின் ஆரம்ப சக்தி வழங்கல் மற்றும் உருவாக்குதல் தகவல்களை விஞ்ஞாணிகள் அறிந்து கொள்ள முடியும். மற்றொரு சென்சார் சூரியனின் சக்தி எவ்வாறு விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்த தகவல்களை அளிக்கும். சூரியனின் சக்தி விநியோகத்தை அளவீடு செய்வது முக்கியமானது. வெளிச்சத்தின் ஒவ்வொரு அலைநீளமும் பூமியின் வழிமண்டலத்தில் வெவ்வேறு விதமாக எதிரொலிக்கும்’’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.