செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் செயலிழந்து விட்டது – நாசா அறிவிப்பு

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்து வந்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பிறகு செயலிழந்து விட்டதாக நாசா அறிவித்துள்ளது.

rover

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா 2003ம் ஆண்டு ஆஃபர்ச்சுனிட்டி என்ற ரோவர் விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது.

இதையடுத்து, செவ்வாய் கிரகத்தை ஆடைந்த ரோவர் அங்கிருந்த பாறைகளை லேசர் மூலம் துளையிட்டு அதன் மாதிரிகளை சேகரித்து எடுத்து பூமிக்கு அனுப்பியது. இந்நிலையில் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் வீசிய புயலின் காரணமாக ரோவர் விண்கலம் காணாமல் போனது. கிட்டதட்ட 7 மாதங்களாக தொடர்பில் இல்லாத ரோவர் விண்கலத்தை நாசா விஞ்ஞானிகள் தேடி வந்தனர்.

புயலின் வேகம் குறைந்த நிலையில் ரோவர் விண்கலம் தென்பட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, அது முற்றிலும் செயலிழந்து விட்டதாகவும், சிக்னல் துண்டிக்கப்பட்டதாகவும் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். இறுதியாக நேற்று ரோவர் விண்கலத்தை தொடர்ப்பு கொள்ள முயன்றும் பலனளிக்காததால், அது முற்றிலும் செயலிழந்து விட்டதாக நாசா விண்வெளி ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-