உடல்நலம் குறித்த வதந்திகளுக்கு நசிருதீன் ஷா முற்றுப்புள்ளி வைத்தார்….!

பாலிவுட்டின் மூத்த நடிகர் நசிருதீன் ஷா நேற்று உடல்நிலை கடுமையாகப் பாதிப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் வேகமாகப் பரவி வந்தது.

இது அவரது ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இந்த தகவல் உண்மைக்கு புறம்பானது என்று நசிருதீன் ஷா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

‘என்னுடைய உடல்நலன் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி. நான் ஊரடங்கை கடைபிடித்து நலமுடன் வீட்டில் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். தயவு செய்து வதந்திகளை நம்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.