நடராஜனுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை?

 சென்னை,

திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார்.

அவரது கல்லீரல், சிறுநீகரம் தற்பொது சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனுக்கு பொருத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கார்த்தியின் உடல் உறுப்புகள் நடராஜனின் உடல்நிலைக்கு ஒத்துப்போகும் நிலை ஏற்படின் உடனே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

சிறுநீரகம், கல்லீரல் செயல் இழப்பு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளது.

இதையடுத்து மூளைச்சாவு காரணமாக உறுப்பு தானம் செய்வோரிடமிருந்து கல்லீரலைப் பெறுவதற்காக தமிழக மாற்றுஉறுப்பு தான காத்திருப்போர் பட்டியலில் நடராஜன் பதிவு செய்திருந்தார்.  ஆனால்,  இதுவரை அவருக்கு கல்லீரல் கிடைக்கவில்லை.

இந்நிலையில், தற்போது திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவரை சென்னைக்கு  கொண்டு வந்துள்ளனர்.

அவரது  கிட்னி மற்றும் கல்லீரல் நடராஜனுக்கு பொருந்துமா என்பது குறித்து , பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமன மருத்துவர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் கார்த்தியின் உடல் உறுப்புகள் நடராஜனுக்கு ஒத்துப்போகும் நிலை ஏற்பட்டால் உடனடியாக நடராஜனுக்கு கிட்டி மன்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும் என்று தெரிகிறது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Natarajan liver transplant surgery today?, நடராஜனுக்கு இன்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை?
-=-