ரபரப்பான அரசியல் சூழ்நிலையில், ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா, தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடப்போவதாக செய்திகள் அடிபடுகின்றன. இந்த  சூழலில் சசிகலாவின் கணவர் நடராஜனும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசரும் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த மாதம் 22-ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா இன்று வரை மருத்துவமனையிலேயே சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறுவிதமான யூகங்கள் வெளியானபடி இருக்கின்றன. அவரை நலம் விசாரிக்க மருத்துவமனை சென்ற கவர்னர், மத்திய அமைச்சர், அரசியல் தலைவர்கள் எவரும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதிக்கப்படவில்லை.
1476096510-6182
இந்நிலையில் தமிழகத்தில் துணை முதல்வர், பொறுப்பு முதல்வர், தற்காலிக முதல்வர், புதிய முதல்வர், ஜனாதிபதி ஆட்சி என பல்வேறு நெருக்கடிகள் அ.தி.மு.க.வுக்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த சூழலை வைத்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் கணிசமானோரை இழுத்து ஆட்சியைப் பிடிக்க, தி.மு.க. முயல்வதாகவும் ஒரு கருத்து உலவுகிறது.
இதைத் தடுக்கும் முகமாக, சசிகலாவை அ.தி.மு.க.வின் துணைப்பொதுச்செயலாளராக்கி, தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட வைக்க அதிகமுக திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க.வுக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் ஆதரவு கரம் நீட்டியுள்ளார்.
சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஜெயலலிதாவின் ஒளிப்படங்களை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியபோது, அதை மறுத்து அறிக்கைவிட்டார் திருநாவுக்கரசர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய துணைத்தலைவர் ராகுல், அப்பல்லோ மருத்துவமனை வந்து ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து மருத்துவர்களிடம் விசாரித்தார்.
இதையடுத்து காங்கிரஸூம் அதிமுகவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நெருங்கி வருவது உறுதியாகி இருக்கிறது.
இதற்கிடையே, தமிழ்நாடு காங்கிரஸ் தனது கூட்டணி கட்சியான தி.மு.க. மீது அதிருப்தியில் இருக்கிறது. உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகக் குறைந்த இடங்களையே தி.மு.க. அளித்துள்ளது.
இந்த சூழ்நிலையில் திருநாவுக்கரசரின்  அதிரடி அரசியலுக்கு பின்னால் சசிகலா நடராஜன் இருப்பதாக பேசப்படுகிறது.
இருவரும் ரகசியமாக சந்தித்தே வியூகங்களை வகுத்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
“ஒரு காலத்தில் காங்கிரஸ் – அ.தி.மு.க. கூட்டணியே தமிழகத்தில் நிலவியது. இதுவே இயற்கையான கூட்டணி என்று தலைவர்களாலும், தொண்டர்களாலும் சொல்லப்பட்டு வந்தது. இடையில் இரு கட்சிகளின் அரசியல் பயணமும் திசைமாறின.
இப்போது மீண்டும் அதே பழைய கூட்டணி ஏற்படும் என்று தோன்றுகிறது. அப்பல்லோ மருத்துவமனை வந்த ராகுல், “அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருப்போம்” என்று சொல்லிச் சென்றதும் இதை உறுதிப்படுத்துகிறது” என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.