மெல்போர்ன்: மொத்தம் 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடர் முழுவதும், இந்திய அணிக்கு, ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று கணித்துள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

முதல் இன்னிங்ஸில் 68 ரன்களைக் கொடுத்து, 1 விக்கெட் மட்டுமே லயன் கைப்பற்றிய நிலையிலும் இவ்வாறு கணித்துள்ளார் பாண்டிங்.

அவர் கூறியுள்ளதாவது, “இந்திய அணிக்கு எதிராக வேறு எந்த ஸ்பின்னரைப் போலவும், இவரும் மிகவும் வெற்றிகரமானவர். இவர், டெஸ்ட் போட்டிகளில், விராத் கோலியை, பிறரைவிடவும் அதிகமுறை அவுட்டாக்கியுள்ளார்.

மேலும், புஜாராவுக்கும் அதிக தொல்லை தருகிறார். வலதுகை பேட்ஸ்மென்களுக்கு இவர் பெரிய ஆபத்தாக இருக்க முடியும். அவர் பேட்ஸ்மென்களுக்கு அழுத்தம் தருகிறார் மற்றும் பந்துவீச்சில் குறைந்த தவறுகளையே செய்கிறார். எனவே, இந்திய அணிக்கு, இத்தொடர் முழுவதும் இவர் ஆபத்தாக இருக்கப்போவது உறுதி” என்றுள்ளார் பாண்டிங்.

நாதன் இதுவரை 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 390 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார்.