cinema-halls-movie-nationalanthem
இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் திரைப்படம் தொடங்குவதற்கு முன்பு தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால் ஏற்கெனவே திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது என்பது தற்போதைய இளைஞர்கள் பலருக்குத் தெரியாது. ஆம்.. 1975ஆம் ஆண்டு வரை திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு வந்தது. ஆனால் படம் துவங்குவதற்கு முன் அல்ல.. படம் முடிவடைந்தவுடன் இசைக்கப்பட்டது.
ஆனால் மக்கள் அதை மதிக்காமல் ( எழுந்து நிற்காமல்) வீட்டுக்கு கிளம்பவதிலேயே குறியாக இருந்தார்கள். இப்படி மக்கள், தேசிய கீதத்தை அவமதித்ததால் தேசிய கீதம் தடை செய்யப்பட்டது.
பிறகு இது தொடர்பாக வெகு காலம் கழித்து வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது. இதை
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது திரையரங்குகளில் தேசிய கீதத்தை இசைப்பது குழப்பத்தை ஏற்படுத்தும் என்றும் படத்தை காட்சிப்படுத்துவற்கு முன்பு மக்கள் எழுந்து நிற்பது இடையூறை ஏற்படுத்தும் தெரிவித்தது. தவிர இதனால் தேசிய கீதத்துக்கு அவமதிப்பதான் ஏற்படும் என்றும் கூறி சென்னை உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்போது உச்சநீதிமன்றம், திரையரங்குகளில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறது